காலைக்கதிர் செய்தியாளர் மீதான தாக்குதல்; தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் (வயது55) மீது திங்கட்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. நன்கு திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன்பாக நிறுத்த பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒன்றியம் வலியுறுத்தியிருக்கின்றது.

கடந்த இரு தசாப்த காலத்தில் தமிழ் ஊடகங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை வெறித் தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட எவரும் சட்டத்தின் முன்னால் இதுவரை நிறுத்தப்படாத நிலையில், இப்போது இடம்பெற்றுள்ள தாக்குதல் மற்றொரு இருண்ட யுகத்துக்கான ஆரம்பமா என்ற கேள்வி எழுவதாகவும் ஒன்றியத்தின் சார்பில் அதன் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“பிரதேச செய்தியாளரும் , பத்திரிக்கை விநியோகஸ்தருமான செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

யாழ்.மாநகரின் புறநகர் பகுதியான கொழும்புத்துறை துண்டி பகுதியில் திங்கள் காலை இராஜேந்திரனை இடைமறித்த 10 பேர் கொண்ட குழு அவர் மீது சரமாரியாக வாள்களால் வெட்டிவிட்டு தப்பித்து சென்றுள்ளது. 5 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களே இத்தாக்குதலை நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தப்பட்ட பாணி இது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்பதைக் காட்டுகின்றது.

கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தவும் ஊடக அமைப்புக்கள் வலியுறுத்திவரும் நிலையில், இவ்வாறான கொடூர தாக்குதல் ஒன்று இடம்பெற்றிருப்பது ஊடகத்துறை சார்ந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

செல்வராசா இராஜேந்திரன் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதலாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த உடனடியாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் வலியுறுத்தும் அதேவேளையில், இத்தாக்குதலைக் கண்டித்தும், விசாரணையை வலியுறுத்தியும் நடத்தப்படும் போராட்டங்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழச் சங்கத்தில் சிவராம், நடேசன் நினைவுக்கூட்டம்

sivaram-nadesan-01படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களான தர்மரட்னம் சிவராம் ஐயாத்துரை நடேசன் ஆகியோரின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிமை கொழும்புத்; தமிழச்சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஒன்றியத்தின் செயலாளர் ஆர் பாரதி தலைமைதாங்கினார். ஓன்றியத்தின் தலைவர் அ.நிக்ஸன் அறிமுகவுரையாற்றினார்.

மூத்த ஊடகவியலாளரும் சன்டே ஒப்சேவர் ஆங்கில வார இதழின் முன்னாள் ஆசிரியருமான லக்ஸ்மன் குணேசேகர நினைவுப் பேருரையாற்றுவார். “நல்லாட்சி அரசாங்கத்தில் இனமுரண்பாடுகளுக்கான தீர்வு முயற்சிகளின் தற்போதைய நிலை” என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.

‘நவமனி’ நாளேட்டின் பிரதம ஆசிரியரும், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான எம்.என்.அமீன் சிறப்புரையற்றினார். ஓன்றியத்தின் பொருளாளர் ஜீவா சதாசிவம் நன்றியுரை நிகழ்த்தினார்.
5_04
5_05
5_07
5_08
5_09
5_06
5_10
5_11

கொல்லப்பட்ட 41 தமிழ் ஊடகவியலாளர் குறித்த விசாரணை வேண்டும்

கடந்த காலங்களில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன 41 ஊடகவியலாளர்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்றை அமைக்க வேண்டும் என வடபகுதி ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கைவிடுத்தனர். Continue reading “கொல்லப்பட்ட 41 தமிழ் ஊடகவியலாளர் குறித்த விசாரணை வேண்டும்”

ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. Continue reading “ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு”

பத்திரிகையாளர் சி.எஸ்.காந்தி காலமானார்

மலையக இலக்கியவாதியான சி.வி.வேலுப்பிள்ளையின் பேரனும் மலையகத்தின் மூத்த கவிஞரும் ஊடகவியலாளருமான சி.எஸ்.காந்தி, மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலமானார். Continue reading “பத்திரிகையாளர் சி.எஸ்.காந்தி காலமானார்”

தகவலுக்கான உரிமைச் சட்டமூலத்துக்கு வரர்வேற்பு

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது 2016 ஆம் ஆண்டின் தகவலுக்கான உரிமை சட்டமூலத்தினைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டமையை வரவேற்கின்றது. Continue reading “தகவலுக்கான உரிமைச் சட்டமூலத்துக்கு வரர்வேற்பு”

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய இணையத் தளம் அங்குரார்ப்பணம்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள். Continue reading “தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய இணையத் தளம் அங்குரார்ப்பணம்”

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கும் மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது

தமிழ் ஊடகத்துறையில் பெண் பத்திரிகையாளர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் “மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது” ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இவ்வருடம் முதல் வருடாந்தம் வழங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். Continue reading “தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கும் மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது”

துன்புறுத்தலுக்கு ஆளான ஊடகவியலாளர் பற்றி ஆராய விசேட குழு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் துன்புறுத்தல்களுக்குக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளார்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு நியாயம் வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. Continue reading “துன்புறுத்தலுக்கு ஆளான ஊடகவியலாளர் பற்றி ஆராய விசேட குழு”

புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம்

2015/12/12 இல் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம்: Continue reading “புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம்”