தகவலுக்கான உரிமைச் சட்டமூலத்துக்கு வரர்வேற்பு

RTI

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது 2016 ஆம் ஆண்டின் தகவலுக்கான உரிமை சட்டமூலத்தினைப் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டமையை வரவேற்கின்றது.

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது தகவலுக்கான உரிமை சட்டமூலத்தினைப் பாராளுமன்றத்தினால் 2016 ஆம் ஆண்டு யூன் மாதம் 24 ஆந் திகதி ஏகோபித்த வாக்குகளின் மூலம் நிறைவேற்றப்பட்டமையை வரவேற்கின்றது

இலங்கைப் பத்திரிகைச் சமூகம், இலங்கை எழுத்தாளர் பேரவை, சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் ஒன்றிணைப்பான இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம், இலங்கைத் தமிழர் ஊடக ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், ஊடகப் பணியாளர் மற்றும் தொழிற்சங்கங்களின் பேரவை மற்றும் தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பு என்பவை 1998 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரமும் சமூகப் பொறுப்புடமையும் பிரகடனப்படுத்தப்பட்டது முதல் இச்சட்டத்திற்காகப் பிரச்சாரம் செய்து வருகின்றது.

2003/2004 ஆம் ஆண்டுகளில் (அப்போதைய) தகவல் சுதந்திரச் சட்ட மூலமானது பிரதமர் (அப்போதைய) ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான முன்னாள் சட்டமா அதிபரான காலஞ் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி கமலசபேசன், அப்போதைய நீதி அமைச்சின் செயலாளர் திருமதி தாரா விஜேதிலக மற்றும் சட்டவரைஞர் திணைக்களத்தைச் சேர்ந்த திருமதி சிறியாங்கனீ பெர்னான்டோ, எழுத்தாளர் பேரவையின் அப்போதைய தலைவரான திரு. சின்ஹ ரணதுங்க, திரு. வருண கருணாதிலக (சுஊஅ) மற்றும் பேரவையின் சட்ட ஆலோசகரான திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன ஆகியோரைக் கொண்ட குழுவொன்றினால் வரையப்பட்டது.

சட்டமூலமானது அது பின்பற்றிய சட்டங்களின் தொகுப்பொன்றாகவிருந்தது. 2010 ஆம் ஆண்டில், இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது, அப்போதைய நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவினால் முன்னெடுக்கப்பட்ட 2004 ஆம் ஆண்டின் தகவல் சுதந்திரச் சட்டத்தின் மீளாய்விலே பங்குபற்றியது. பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கரு ஜயசூரிய (தற்போதைய சபாநாயகர்) 2010 ஆம் ஆண்டில் 2004 ஆம் ஆண்டு தகவல் சுதந்திரச் சட்டமூலத்தை ஒரு தனியார் உறுப்பினர் பிரேரணையாக அறிமுகப்படுத்தினார்.

ஆனால், சட்டமூலத்தை விவாதிப்பதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டது. 2015/ 2016 இல், சிங்க ரணதுங்க (பிரதித் தலைவர், இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம்), வருண கருணாதிலக மற்றும் திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன ஆகியோர், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் கீழ், இவ்வுடனடிச் சட்டமூலத்தினை முடிவுறுத்திய சட்டவரைபுக் குழுவில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது, இலங்கைப் பிரஜைகளினது இன்றியமையாத உரிமையொன்றினைப் பாதுகாக்கும் மிகவும் காலந் தாழ்த்தப்பட்ட இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையைக் கொண்டாடுகின்றது. இம்முயற்சியானது, தற்போதைய தேசிய ஒன்றிணைந்த அரசாங்கத்திற்குப் புகழ் சேர்ப்பதுடன், இது 2004 ஆம் ஆண்டின் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், பாராளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், அப்போது இதனைச் சட்டமாக்க முடியவில்லை. இதன் மூலம், இலங்கையானது தகவலுக்கான உரிமைச் சட்டமூலத்தை நிறைவேற்றிய கடைசிக்கு (பூட்டான்) முந்திய தெற்காசிய நாடாவதுடன் இச்சட்டத்தை நிறைவேற்றிய உலகின் 108 ஆவது நடாகவும் விளங்குகின்றது.

தகவலுக்கான உரிமை சட்டமூலத்திற்கு தகவலுக்கான உரிமை தரப்படுத்தல் முகவராண்மைகள் மூலம் உயர் தரமதிப்பிடல் வழங்கப்பட்ட அதேவேளை, இலங்கைப் பத்திரிகை ஸ்தாபமானது வெள்ளிக்கிழமை சபாபீடத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்களுக்காகக் காத்திருக்கின்றது.

விசேடமாக, இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது, தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவிற்கு இந்த உத்தேச சட்டத்தினை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதற்கும் அவர்களது தீர்மானங்களைப் பொருத்தமான துரிதமான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் வேண்டிய சட்ட அதிகாரங்களை இச்சட்டமூலமானது வழங்கவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமானது, வரைபுச் செய்முறையின்போது இத்தகைய அதிகாரங்களை ஆணைக்குழுவிற்கு வழங்குவதைத் தீவிரமாக ஆதரித்தது.

தகவலுக்கான உரிமைச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை எவ்வாறிருப்பினும், நாம் நாட்டில் உத்தியோகபூர்வ இரகசியங்கள் கொண்டதொரு சவால்மிகுந்த நீண்டதொரு கலாசாரத்திற்கு முகங்கொடுக்கும் மிகவும் கடினமானதொரு பணியினை மேற்கொள்கின்றோம். ஆகையால், தகவலுக்கான உரிமையினை வினைத்திறன் மிகுந்த முறையில் அமுல்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதானது உண்மையாகவே, இலங்கையில் மேம்படுத்தப்பட்ட ஆட்சி மற்றும் அரசியல் பொறுப்புணர்வினால் பற்றுறுதியுடன் பின்பற்றப்பட வேண்டியதொரு தேசிய முயற்சியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *