ஊடகவியலாளர்களுக்கு முழுநாள் செயலமர்வு

Media Workshop logo 1

தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன.

இதில் பங்குகொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் <tmailmedia@gmail.com> என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு, தங்களுடைய பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது. மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளவும், தங்களுடைய விபரங்களுடன் குறிப்பிட்ட மின்னஞ்சல் முவகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் மட்டுமே செயலமர்வில் உள்ளடக்கப்படுவார்கள் என்பதால் முன்கூட்டியே தம்மை பதிவுசெய்துகொள்ளுமாறு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *