அச்சுறுத்தாமல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்: சுதந்திர ஊடக அமைப்பு

free_media_move

அரசாங்கம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகவியலாளர்கள் அல்லது ஊடக நிறுவனமொன்று பிழை செய்தால் அந்த ஊடக நிறுவனத்தையோ அல்லது ஊடகவியலாளரையோ அரசாங்கம் திட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது.

மாறாக ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் பேசி பிணக்குகளை தீர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் அவ்வாறு பேச்சுவார்த்தை நடாத்தி பிணக்குகளுக்கு தீர்வு காணாவிட்டால் உரிமைகள் என்ற பெயரில் மாற்றுக் கொள்கைகளை வகிப்போரை ஒடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும்.

இலத்திரனியல் ஊடகங்களுக்காக சுயாதீன தர நியம முறைமையொன்று ஊடக சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்படாமை பெரும் குறைபாடாகவே அமைந்துள்ளது.

எனவே, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுயாதீன ஊடக ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகின்றது என சுதந்திர ஊடக அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *