தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கும் மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது

chanrika

தமிழ் ஊடகத்துறையில் பெண் பத்திரிகையாளர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் “மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது” ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இவ்வருடம் முதல் வருடாந்தம் வழங்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஊடகவியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞருமான கலாநிதி சந்திரிகா சுப்பிரமணியம் இதற்கான யோசனையை முன்வைத்து இதற்குத் தேவையான நிதியை வருடாந்தம் வழங்குவதற்கு முன்வந்திருக்கின்றார்.

விருதுடன் இணைந்தததாக சான்றிதளும் 10,000 ரூபா பணப் பரிசும் வருடாந்தம் வழங்கப்படவுள்ளது.

முதல்கட்டமாக இலங்கையிலிருந்து வெளிவரும் அச்சு ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட கட்டுரை ஒன்றை எழுதியவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி அதற்கான தீர்வையும் முன்வைத்து இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் எழுதப்படும் கட்டுரைகளில் சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்படும் கட்டுரையை எழுதியுள்ள பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை புதிய கோணத்தில் ஆராய்ந்து ஆக்கபூர்வமான முறையில் அதற்கான தீர்வையும் முன்வைக்கும் பத்திரிகையாளர்கள் இந்த விருதுக்காக விண்ணப்பிக்க முடியும்.

2016 ஆம் ஆண்டில் எழுதப்படும் கட்டுரைகளுடன் இணைந்ததாக உங்களுடைய விண்ணப்பங்களை இவ்வருட இறுதியில் இதற்காக அனுப்பிவைக்கலாம்.

இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

1 thought on “தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கும் மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *